தினமணி 19.07.2013
தினமணி 19.07.2013
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணித் தொடக்கம்
சத்துவாச்சாரி நேரு நகரில் ஒட்டுமொத்த துப்புரவுப்
பணியை சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் வியாழக்கிழமை தொடங்கி
வைத்தார் .
டெங்கு எதிர்ப்பு மாதத்தையொட்டி, வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் இப்பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மண்டலக் குழுத்
தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.