தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
அடையாறு, தரமணியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் குழாய் இணைக்கும் பணிகள்
மேற்கொள்ளப்படுவதால் தரமணி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட
பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.1) காலை 7 மணி முதல் சனிக்கிழமை (ஆக.3) காலை 7
மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து பள்ளிப்பட்டு வரை குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை தரமணி,
திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவதில்
தடை ஏற்படலாம். லாரி மூலம் குடிநீர் பெற 81449 30913, 044 – 24416341 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.