தினகரன் 20.06.2013
மாநகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க 2 வாகனம் ரூ.14.23 லட்சத்தில் வாங்க முடிவு
: திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க ரூ.14.23
லட்சத்தில் 2 வாகனம் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
திருச்சி
மாநகராட்சி பகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இனப்பெருக்க
கட்டுப்பாடு சிகிச்சை செய்யும் பணிக் காக, நாய¢களை பிடித்து கொண்டு செல்ல
இரு வாகனங்கள் வாங்க நக ராட்சி நிர்வாக ஆணையர் ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
செய்துள்ளார். இதையடு த்து இவ்வாகனங் களை கொள் முதல் செய்ய ரூ. 17.80 லட்
சம் மதிப்பீடு தயார் செய்யப் பட்டு டெண்டர் கோரப்பட்டது. இதில் சென்னையைச்
சேர்ந்த நிறுவனம் ரூ. 14.23 லட்சத்தில் இரு வாகனங்களை தருவதாக
தெரிவித்திருந்தது.
இதையடுத்து சென் னையைச் சேர்ந்த நிறுவனத்திடம்
இருந்து நாய் களை கொண்டு செல்வதற்கான இரு வாகனங் களை வாங்க மாநகராட்சி
திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி தரப்பில் கூறுகை யில்,
Ôதொழில்நுட்ப தகுதி அடிப்படையிலும், குறைந்த ஒப்பந்தப்புள்ளி
அடிப்படையிலும் சென்னை நிறுவனம் தேர்வாகியுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர்
ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கூடுதலாக ரூ. 4.23 லட்சம்
தேவைப்படுகிறது. இந்த வாகனத்தை சாலைகளில் இயக்க காப் பீடு, சாலைவரி
செலவினம் ரூ. 2 லட்சம் கூடுதலாகும். அதனால் கூடுதலாக ரூ. 6.27 லட்சம்
மாநகராட்சி மூலதனநிதி, திடக்கழிவு, மேலாண்மை, இதர வாகனங்கள் புதிதாக
வாங்குதல் ஆகியவற்றிலிருந்து அளி க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுÕ என கூறி
னர்.
அதே போல் பொன்மலை கோட்டத் தில் பிராணிகளின் இனப்பெருக்கத்தை
கட்டுப்படுத்த ரூ. 15 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இங்கு,
அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு, மருத்துவர் அறை மற்றும்
பிரா ணிகள் பாதுகாப்பாக வைக்க புதிய கட்டடம் கட்டப்படும். வார்டு 36ல்
துப்புரவு பணி யாளர் குடியிருப்பு அருகே புதிதாக ரூ. 15 லட்சத்தில்
இக்கட்டடம் கட்டப்பட உள்ளது. அரசு ஒதுக்கும் நிதி போக மீதமுள்ள தொகையை
மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஒது க்க திட்டமிட்டுள்ளனர்.