தினத்தந்தி 26.09.2013
குடிநீர் குழாயில் உடைப்பு 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகிப்பது நிறுத்தம்
வேலூருக்கு பாலாறு உள்பட பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர்
பெறப்பட்டு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த
நிலையில் கீழ்மொணாவூர் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு
ஏற்பட்டது. அது பற்றிய தகவல் கிடைத்தும் மாநகராட்சி கமிஷனர் ஜானகி
உத்தரவின் பேரில், குடிநீர் குழாய் ஆய்வாளர் நிஷார் அகமது ஊழியர்களுடன்
சம்பவ இடம் சென்று உடைந்த குழாயை அகற்றிவிட்டு புதிய குழாய் பதிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளார்.
எனவே அல்லாபுரம், தொரப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 2
நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், சனிக்கிழமை முதல்
வழக்கம் போல வினியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.