தினத்தந்தி 14.12.2013
ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் கோட்ட மேலாளர் ஆய்வு

திருப்பூர் ரெயில் நிலை யத்தில் சுமார் ரூ.2 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணி களை கோட்ட மேலா ளர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.
கோட்ட மேலாளர் ஆய்வு
டாலர் சிட்டியான திருப் பூரில் ரெயில் போக்குவரத்து முக்கிய இடம்
பிடித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் பனியன் வர்த்தகம் தொடர் பாக
வருபவர்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதிகப்படியான மக்கள் பயன்பாட்டில் உள்ள திருப் பூர் ரெயில் நிலையத்தில்
பயணிகளின் வசதிக்காக மேம்பாட்டு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரா மரிப்பு பணிகள்
தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி களை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர்
சுஜாதா ஜெயராஜ் நேற்று காலை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.2 கோடியில் பணிகள்
ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தின் நுழைவு வாயில் புதிதாக
அமைப்பு, முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுதல்,
பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடி நீர்
வசதி, சுற்றுச்சுவர் கட்டு தல், ரெயில் நிலையத்தின் முன்புறம் உள்ள
பகுதிகள் புணரமைப்பு, பார்சல் பகு தியை புதிதாக வடிவமைத்தல் போன்ற பணிகள்
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடந்து வரு கிறது.
இந்த பணிகளை கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் ஆய்வு செய்தார். இந்த ஆய்
வின் போது கோட்ட பொறி யாளர்கள், துணை மேலாளர் கள், திருப்பூர் ரெயில் நிலைய
அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.