தினத்தந்தி 20.12.2013
வரி செலுத்தாத 2 பேரின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் கட்டணம் செலுத்தாமலும், வீட்டு வரி கட்டாமலும் இருப்பவர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர்
செல்வராஜ் மற்றும் மேயர் விசாலாட்சி ஆகியோர் உத்தரவிட்டு இருந்தனர்.
அதைத்தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு
துண்டிக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில்
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 4 செட்டி பாளையம் பகுதியில்
குடியிருந்து வரும் முத்துராமய்யா மகன் சுருளி ராமன் கடந்த 2 வருடங்களாக
சொத்து வரியும், 3 வருடங்களாக குடிநீர் கட்டணமும் செலுத்தாமல் இருந்தார்.
அவரது வீட்டு குடிநீர் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது. அதே போல ஏ.வி.பி.
லே-அவுட்டில் குடியிருந்து வரும் ராமனின் மனைவி வேளாங்கன்னி (45) கடந்த 3
வருடங்களாக குடிநீர் கட்டணமும், வீட்டு வரியும் செலுத்தாமல் இருந்து
வந்துள்ளார். அவரது வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த
பணியில் 1-வது மண்டல உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா, வருவாய் ஆய்வாளர்
சக்திவேல், வருவாய் உதவியாளர் தங்கவேல் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டி
ருந்தனர்.
வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.