தினமணி 13.02.2014
சேலத்தில் நாளை முதல் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து
தினமணி 13.02.2014
சேலத்தில் நாளை முதல் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து
சேலம் மாநகரில் பிப்ரவரி 14, 15 ஆகிய இரு நாள்களும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சேலம் மாநகருக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் – ஆத்தூர் வழித்
தடத்தில், அரபிக் கல்லூரி அருகில் தனிக் குடிநீர் திட்டக் குழாய் இணைப்புப்
பணிகள் நடைபெறுகின்றன. இதனால், வரும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு
நாள்களுக்கும் சேலம் மாநகரில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும்,
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
ஆணையர் மா.அசோகன் அறிவித்துள்ளார்.