தினத்தந்தி 14.02.2014
குடியாத்தம் நகராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பில் பணியாளர்களுக்கு சீருடை நகரமன்ற தலைவர் வழங்கினார்

குடியாத்தம்
நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள்,
ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள், மேல்நிலைதொட்டி காவலர்கள், குடிநீர்
பணியாளர்கள், மின் பணியாளர்கள், இரவு காவலர் ஆகியோருக்கு ரூ.2 லட்சம்
மதிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி
ஆணையாளர் என்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்ராஜ்
முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா கலந்து கொண்டு,
பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், கவுன்சிலர்கள் கம்பன்,
சுரேஷ், மீனாட்சி, துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ், களப்பணி உதவியாளர்
பிரபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.