தினமணி 17.02.2014
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி
தினமணி 17.02.2014
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி
மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் ஆதார்
அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி, ஓடந்துறை நகராட்சி
துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் பங்கேற்று, புகைப்படம் எடுக்கும் பணியை
தொடங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர்கள் பாலன், குதுப் நிஷா, நகராட்சி மேலாளர் சித்தார்த்தன்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்ட முகாம் குறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் கூறியது:
கடந்த முகாமில் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டுப் போன 5 வயதிற்கு
மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதில் 1 முதல் 7 வது வார்டு பகுதி மக்கள்
14 முதல் 16-ஆம் தேதி வரையும், 8 முதல் 13 வது வார்டு பகுதி மக்கள் 17
முதல் 19-ஆம் தேதி வரையும் எஸ்.எம். நகர் நகராட்சி துவக்கப் பள்ளியிலும்,
12, 23, 24,25 வது வார்டு பகுதி மக்கள் 20 முதல் 22-ஆம் தேதி வரை சான்ஜோஸ்
மெட்ரிக் பள்ளியிலு ம், 28, 31, 33 வார்டு பகுதி மக்கள் 20 முதல் 22-ஆம்
தேதி வரை நடூர் நகரவை துவக்கப் பள்ளியிலும், 14, 15, 16 வது வார்டு பகுதி
மக்கள் 23 முதல் 25-ஆம் தேதி வரை வ.உ.சி. நகரவை துவக்கப் பள்ளியிலும், 21,
22, 26 வது வார்டு பகுதி மக்கள் 26 முதல் 28-ஆம் தேதி வரை காட்டூர் நகரவை
துவக்கப் பள்ளியிலும், 32 வது வார்டு பகுதி மக்கள் 26 முதல் 28-ஆம் தேதி
வரை மணி நகர் நகரவை நடுநிலைப் பள்ளியிலும் பங்கேற்று புகைப்படம் எடுத்துக்
கொள்ளலாம்.
பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்தி பயனடைய வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.