தினமணி 12.02.2010
கலப்பட டீ விற்ற கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி, பிப். 11: திருநெல்வேலி சந்திப்பில் கலப்பட டீ விற்ற கடை உரிமையாளர், ஊழியர் ஆகியோர் மீது மாநகராட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இம் மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசகுமார், சாகுல்ஹமீது ஆகியோர் கடந்த 25 -9 -2009 அன்று சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்தக் கடையில் கலப்பட டீ விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அதை பகுப்பாய்வு செய்ததில், அதில் செயற்கை வண்ணம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக அந்தக் கடை உரிமையாளர் தர்மராஜ், ஊழியர் பகவதி ஆகியோர் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அனுமதிக் கேட்டு, அதன் இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அவர் அனுமதி அளித்ததின் பேரில், அவர்கள் இருவர் மீதும் மாநகராட்சி சார்பில் திருநெல்வேலி நான்காவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.