தினமலர் 10.03.2010
வேலூர் மாநகருக்கு 2 நாட்கள் குடிநீர் ‘கட்‘
வேலூர்:மேல்விஷாரத்தில் பொன்னை யாற்று குடிநீர் மெயின் பைப் உடைந்ததால், இரண்டு நாட்கள் வேலூருக்கு குடிநீர் சப்ளை கிடையாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.வேலூருக்கு குடிநீர், பாலாறு மற்றும் பொன்னை ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சப்ளை செய்யப்படுகிறது. இதில் பொன்னை ஆற்றிலிருந்து குடிநீர் வரும் மெயின் பைப், மேல்விஷாரம் அருகே நேற்று மாலை உடைந்து விட்டது. இதனால் வேலூருக்கு இன்னும் இரு நாட்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி பொறியாளர் தேவக்குமார் கூறுகையில், உடைந்த பைப் லைன் சரிசெய்ய இரு நாட்களாகும். எனவே பொதுமக்கள், குடிநீரை வீணாக செலவழிக்காமல், சிக்கனமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார்.