தினகரன் 27.05.2010
மாநகராட்சி அதிகாரிகள் நாள் தோறும் 2 மணி நேரம் மக்கள் குறை கேட்க வேண்டும்
பெங்களூர், மே 27: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் தினமும் பகல் 3.30 மணி முதல் 5.30 மணிவரை அலுவலகத்தில் அமர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வுகாண வேண்டும் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெருநகர் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள், மே 22ம் தேதிக்குள் சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் 33 கவுன்சிலர்கள் இன்னும் சொத்து விவரத்தை தாக்கல் செய்யவில்லை. கர்நாடக முனிசிபல் சட்டம் 19 (1) மற்றும் (2)வது விதியின்படி, சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தெரிந்திருந்தும், சில மூத்த கவுன்சிலர்கள் விவரம் தாக்கல் செய்யாதது கவலை அளிக்கிறது.
மகாதேவபுரா மண்டலத் தில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட எம்பிராய் டரி பயிற்சி நிலையத்தில், 201 திருநங்கைகள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
மாநகரில் உள்ள 8 மண்டலங்கள், வார்டு அளவில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து துறையின் அதிக£ரிகளும் தினமும் பகல் 3.30 மணி முதல் 5.30 மணிவரை அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வுகாண வேண்டும். மனுவுடன் வரும் பொதுமக்களை சந்திக்காமல் புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.