தினகரன் 27.07.2010
குள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு 2 வீடுகள் அதிரடியாக இடிப்பு
கோவை, ஜூலை 27:கோவை நகரில் குளத்து வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகள் இடிக்கப்பட்டது.
தடாகம் ரோடு ஏ.கே.எஸ் நகரில் முத்தண்ண குளத்திலிருந்து பொன்னையராஜபுரம் செல்லும் குளத்து வாய்க்காலில் 50க்கும் மேற்பட்ட கான் கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் உருவாகியுள்ளது.
வாய்க்காலை ஒட்டி, மாநகராட்சி குளம், வாய்க்காலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நகர பொறியாளர் கருணாகரன் தலைமையில் அதிகாரிகள் திடீரென கட்டடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதில் 1 சென்ட் முதல் 2 சென்ட் வரை வாய்க்கால் பகுதி ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து கட்டடம் இடிக்க உத்தரவிடப்பட்டது. நகரமைப்பு அலுவலர் சவுந்தரராஜன், உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலையில், வாய்க்கால் கரை மற்றும் மாநகராட்சி பூங் காவை ஒட்டியிருந்த வீட்டு காம்பவுண்ட் சுவர் மற்றும் இன்னொரு வீட்டின் ஒரு பகுதி அதிரடியாக பொக் லைன் மூலமாக நேற்று இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு எல்லைக்குள் உள்ள வீடுகள் இடிக்கப்படும், எல்லை மீறி கட்டடம் கட்டியவர்கள் தாங்களே முன் வந்து கட்டடங்களை இடித்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறு கையில், “கோவை நகர் பகுதியில் ஒரு ஆண்டாக ஆக்கிரமிப்பு கட்டடங் களை கண்டறிந்து உடனடியாக இடித்து வருகி றோம். மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி னால் அதை அனுமதிக்க முடி யாது. நகர் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்கள் தொடர் ந்து இடிக்கப்படும். ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு தொ டர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். முறையாக அனுமதி பெற்று, கட்டவேண்டும் என்றார்.
கோவை காந்திபார்க் ஏ.கே.எஸ் நகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர்.