தினகரன் 03.08.2010
காயல்பட்டினத்தில் ரூ.2 லட்சத்தில் வலைக்கூடம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
ஆறுமுகநேரி, ஆக. 3: காயல்பட்டினம் கடற்கரை யில் ரூ.2 லட்சத்தில் வலைக்கூடம் கட்டப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
காயல்பட்டினம் நக ராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார். துணை தலைவர் கஷாலிமரைக்கார், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில், ஓடக் கரையில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம் கட்டுதல், கீழலட்சுமிபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் கட்டுதல், ஜெயதுரை எம்பி உள்ளூர் வளர்ச்சி நிதியில் ரூ.4.25 லட்சம் மதிப்பில் துளிர் பள்ளிக்கு செல்ல தார்சாலை புதுப்பித்தல், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து கொம்புதுறை மற்றும் சிங்கிதுறை ஆகிய மீனவ பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் வலைக்கூடம் கட்டுதல், காயல்பட்டினம் பகுதிக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க 40 ஹெச்பி மோட்டார் மூலம் மேலாத் தூரிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் கூடுதலாக புதிதாக 40 ஹெச்பி மோட் டார் மாற்றி குடிநீர் சப்ளை செய்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.