மாலை மலர் 26.10.2010
பணி நியமனத்துக்கு ரூ
.2 லட்சம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி ஊழியர் “சஸ்பெண்டு” கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை
சென்னை
, அக். 26- சென்னை மாநகராட்சி கல்வித்துறை இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்தனர்.தேர்வு செய்யப்பட்டவர்களின் கோப்புகளை கல்வித்துறை ஊழியர் கிருஷ்ணன் குட்டி என்பவர் பராமரித்து வந்தார்
. அவர் தேர்வு செய்யப்பட்ட 4 பேரை தொடர்பு கொண்டு தலா ரூ.2 லட்சம் லஞ்சம் தந்தால் பணி நியமன பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று பேரம் பேசினார்.இதுபற்றி மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
. அப்போது கிருஷ்ணன் குட்டி, அவரது செல்போனிலேயே லஞ்ச பேரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டி
“சஸ்பெண்டு” செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.சஸ்பெண்டு உத்தரவை வழங்குவதற்காக கிருஷ்ணன் குட்டியின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர்
. அதற்குள் மோப்பம் பிடித்த கிருஷ்ணன் குட்டி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவுக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டு கதவில் “சஸ்பெண்டு” உத்தரவை அதிகாரிகள் ஓட்டினார்கள்.