தினமலர் 18.03.2010
தீவிர வரிவசூல் முகாம் மார்ச் 20 வரை நீட்டிப்பு
திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நடந்து வரும் தீவிர வரிவசூல் முகாம் மார்ச் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி அனைத்து நிலுவையிலுள்ள வரியினங்கள், 2009-10ம் இரண்டாம் அரையாண்டு வரையினங்கள் ஆகியவற்றை, பொன்மலை, கோ–அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகங்களில்உள்ள சேவை மையங்களிலோ ஒல்லது தஞ்சை ரோடு–அரியமங்கலம் வார்டு அலுவலகம். விறகுபேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், கே.கே.நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோவில் தெரு வார்டு அலுவலகம், உறையூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், எ.புதூர் சித்த மருத்துவக் கட்டிடம், தேவர் ஹால் ஆகிய இடங்களில்அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) காலை 8 முதல் இரவு 8 மணி வரை வரிவசூல் செய்யப்படுகிறது. வரியினங்களை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 20ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.