தினமணி 27.03.2010
குடிநீர் உறிஞ்சினால் ரூ.20 ஆயிரம் அபராதம்
திருப்பூர், மார்ச் 26: குடிநீர் குழாயில் மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைகாலம் துவங்கியுள்ளதால் திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பகுதி வீடு களிலுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது அதிகரித்திருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வருகின்றன.
வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது சட்டவிரோதமானது. அவ்வாறு குழாய்களில் மின் மோட்டார் வைத்திருப்பது தெரியவந்தால் மோட்டார்களை பறிமுதல் செய்வதோடு குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், குழாய் இணைப்புகளில் குடிநீர் வீணாகாதவாறு அடைப்பான்கள் பொருத்தியு ம், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தவிர, குடிநீர் விநியோகம் குறித்த குறைகளை 1 முதல் 24 வரையிலான வார்டுகளுக்கு உட்பட்டோர் 22470552, 2201872, 25 முதல் 33 வரை, 37 முதல் 40 வரையிலான வார்டுகளுக்கு உட்பட்டோர் 2249154, 2208976, 34 முதல் 36 வரை, 41 முதல் 52 வரையிலான வார்டுகளுக்கு உட்பட்டோர் 2212303 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.