தினமணி 21.06.2010
கோபியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா
கோபி, ஜூன் 20: நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் சார்பில் ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நம்பியூர்–கோபி சாலையில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் கீதாமுரளி தலைமையில் நடைபெற்றது. நம்பியூர் பேரூர் கழக திமுக செயலாளர் பி.கே.முத்துச்சாமி முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மக்களைவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவஹர் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.வி.சரவணன் கலந்து கொண்டு பேரூராட்சி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் .. திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.