தினமலர் 26.08.2010
பழநிக்கு ரூ.20 கோடியில் குடிநீர் திட்டம்
பழநி:புதிய குடிநீர் திட்டத் திற்காக ரூ.20 கோடியில் பழநி நகராட்சியால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.பாலாறு–பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த் தேக்கம் பழநிக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. பாலாறு–பொருந்தலாறு அணைப்பகுதியில் இருந்து வரும் பைப் லைனில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதால் ஏற்கனவே உள்ள குழாயை ஒட்டி ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் புதிய இரும்பு குழாய் அமைத்தல்.
கோடைகால நீர்த்தேக் கம், பாலாறு –பொருந்தலாறு அணையில் இருந்து வரும் குடிநீரை இணைக்க தரை மட்ட தேக்கத் தொட்டி கட்டுதல், சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்துதல், கோடைகால நீர்த் தேக்கத்தை ஆழப்படுத்தி,அகலப்படுத்துதல், ஒரு நாளைக்கு ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் கொடுக்க வகை செய்தல், காமராஜர் நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைத்தொட்டி கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச திட்ட மதிப்பீடு ரூ.20 கோடியே 3 லட்சத்திற்கு பழநி நகராட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.