மாலை மலர் 22.11.2013

சென்னை, நவ. 22 – சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.
துணை
மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 58
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–
சென்னை
மாநகராட்சி பள்ளிகளில் 10-வது மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ– மாணவிகள்
அதிக மதிப்பெண் பெற்று தர வரிசையில் இடம் பெற்றால் ஊக்கத்தொகை
வழங்கப்படுகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங், கலை– அறிவியல்
பட்டப்படிப்புகள், சட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை
கிடைக்கிறது.
தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் படிக்கும்
மாணவர்களுக்கு இனி ரூ.45 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். சட்டக்கல்லூரி,
நர்சிங் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். எம்.எஸ்.சி. உள்ளிட்ட 5
ஆண்டு படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும்.
சென்னை
மாநகராட்சி பள்ளி, சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10–வது மற்றும் பிளஸ் 2
மாணவ– மாணவிகளுக்கு சுண்டல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரிவாக்கம்
செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதி பள்ளி மாணவ– மாணவிகளுக்கும்
சுண்டல் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பகுதியில் 201 அம்மா
உணவகங்கள் உள்ளன. இவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க மொத்தம் 600 நவீன
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் இவை அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாநகராட்சியில் இருந்தவாரே உணவகத்தை கண்காணிக்க முடியும்.
சென்னை
மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கும்
அதிகாரம் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உள்ளது. மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் விளம்பர பலகைகளை கண்காணிக்க போதிய ஊழியர்கள் இல்லை.
எனவே
விளம்பர பலகை வைக்கவும், அதை கண்காணிக்கவும் கூடிய அதிகாரம் சென்னை
மாநகராட்சி ஆணையருக்கு வழங்கும் வகையில், உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள
வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்படுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார்
195 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின்
வசதிக்காக காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கியுள்ள முதல்–
அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.
இசை மற்றும் கலைக்கு பொதுவான
பாடத்திட்டம், இசை கல்லூரிகளுக்கு 13 துறைகள் ஏற்படுத்தி பல்கலை கழகம்
அமைத்துள்ள முதல்– அமைச்சருக்கு வாழ்த்து.
சென்னை மாநகராட்சி
பகுதியில் உள்ள ஏழை– எளிய மக்களுக்கு கொசுவலை, நொச்சி செடி, பப்பாளி
மரக்கன்றுகள் வழங்கி ஏழை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டி
தேர்வு பயிற்சி யையும் தொடங்கி வைத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
நன்றி. ஆகிய சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.