தினமணி 20.02.2010
2010}11}ம் நிதியாண்டில் சாலை கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம்
மதுரை, பிப். 19: மதுரை மாநகராட்சியில் 2010}2011}ம் நிதியாண்டில் சாலை மற்றும் கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரி விதிப்பு நிதிக் குழுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வரி விதிப்பு நிதிக் குழுத் தலைவர் மகேஸ்வரி போஸ் தலைமை வகித்தார். தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 2010}2011}ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் வருவாய் அதிகரிப்பது தொடர்பாகவும், கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட மக்கள் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வீ.தேவர் என்ற நல்லகாமன், எம்.கணேசன், அழகர்சாமி, கே.பி. கலைமதி, சுஜாதா, எம். ஈஸ்வரி, ஆர்.மங்களஈஸ்வரி, உதவி ஆணையர்கள் ரா.பாஸ்கரன் (வருவாய்), தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.