தினமலர் 26.03.2010
2012ல் ஒன்றுபட்ட மாநகராட்சி: மேயர்
ஈரோடு: ”ஈரோடு மாநகராட்சி 2012ல் ஒன்றுபட்ட மாநகராட்சியாகும்,” என மாநகராட்சி மேயர் குமார்முருகேஷ் பேசினார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பெருந்துறை அபெக்ஸ் காது கேளாதோர் பள்ளிக்கு 5,000 ரூபாய் நிதியை பொது மேலாளர் சுந்தர் வழங்கினார். ரத்ததான முகாமை துவக்கி வைத்து மேயர் குமார்முருகேஸ் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சியுடன், சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மாநகராட்சியாக 2012ல் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். சங்க மாவட்ட செயலாளர் காங்கேஸ், உதவி செயலாளர் ராஜேந்திரன், கோட்டை லயன்ஸ் சங்க தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் அய்யாவு வரவேற்றார். கிளை பொருளாளர் வசந்தமோகன் நன்றி கூறினார்.