தினகரன் 18.06.2013
மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 21ல் நடைபெறுகிறது
மதுரை
மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான
கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகராட்சி, அண்ணா மாளிகையில் மாநகராட்சி
ஆணையாளர் தலைமையில் வரும் 21ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 10.30
மணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 11.30 மணிக்கும்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். பிற்பகல்
12.30 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 3 மணிக்கு ஆரம்பப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், 3.30 மணிக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு
நடைபெறும்.
பணி மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் விண்ணப்ப
படிவத்தை 19ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த
ஆசிரியர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிட விபரம் மற்றும் பணிமூப்பு பட்டியல்
மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது என கல்வி அலுவலர் மதியழகராஜ்
தெரிவித்துள்ளார்.