தினமணி 13.02.2014
உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்
தினமணி 13.02.2014
உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்
உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 12 இடங்களில்,
குடிநீர் தொட்டியும், 21 இடங்களில் எல்இடி விளக்குகளும்
அமைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடன்குடி பகுதிகளில்
குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக தாமிரவருணி கூட்டுக்
குடிநீர்த் திட்டம், எல்லப்பன் நாயக்கன்குளம் குடிநீர்த் திட்டம் மூலம்
குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கூடுதல் குடிநீர்
வசதிக்காக 12 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர்
விநியோகிக்கப்படுகிறது. இதைப்போல உடன்குடி-குலசேகரன்பட்டினம் பிரதான
சாலையில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில்
உள்ளது. விரைவில் இவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்
அவர்.