தினமணி 19.11.2009
சேலம் மாநகராட்சியில் 21, 22 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது
சேலம், நவ.18: சேலம் மாநகரில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 21) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ÷
மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
÷மேட்டூர் நீரேற்றும் நிலையப் பகுதியில் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பகுதியில் மின் வாரியம் 21-ம் தேதி பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளது.
இதனால் இரண்டு நாள்களுக்கு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது.
÷எனவே பொதுமக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.