தினமலர் 15.09.2010
சென்னை குடிநீர் வாரியத்தில் 218 பேருக்கு நியமன உத்தரவு
சென்னை : சென்னை குடிநீர் வாரியத்தில் 218 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனஉத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தில் ஏழு இளநிலை உதவியாளர்கள், ஒரு தட்டச்சர், இரண்டு வரைவாளர்கள், ஒரு உயரழுத்த மின் கருவி இயக்குபவர், 207 களப்பணியாளர்கள் என மொத்தம் 218 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.இதையும் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுளில் சென்னை குடிநீர் வாரியத்தில் 637 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் அசோக் வர்தன் ஷெட்டி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.