தினத்தந்தி 25.10.2013
ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவிகளுக்கு
விலையில்லா சைக்கிள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர் அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு
ஆர்.சின்னச்சாமி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
விழாவில் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி கலந்து கொண்டு 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
விழாவில் கிழக்கு மண்டலக்குழுத் தலைவர்
கே.ஆர்.ஜெயராமன், முதன்மைக் கல்வி அலுவலர் எ.ஞானகவுரி, மாநகராட்சி உதவி
கமிஷனர் கார்த்திக், கவுன்சிலர்கள் முத்துசாமி, சேர்வராஜ் மாரப்பன்,
ராமசாமி, சால்ட் வெள்ளியங்கிரி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,
மாணவிகள் கலந்து கொண்டனர்.