தினமணி 04.10.2013
2,206 நாய்களுக்குத் தடுப்பு ஊசி
தினமணி 04.10.2013
2,206 நாய்களுக்குத் தடுப்பு ஊசி
புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி) உள்பட்ட பகுதிகளில் உள்ள 2,206 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வெறிநாய்க் கடிக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத் தடுப்பூசிகள்
போடப்பட்டதாக என்.டி.எம்.சி. நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் விஹார் பகுதியில் இதற்காக முகாம்
நடத்தப்பட்டதாகவும், அங்கு 253 நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அசோக் விஹார் 1, 2, 3, வாஸிர்பூர் ஜேஜே காலனி, பங்கர் காலனி, பாரத் நகர்,
மாடல் டவுன், ரோஹிணி, குலாபி பாக், நியூ போலீஸ் லைன்ஸ், பஸ்சிம் விஹார்
உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குச் சென்றும் 1,953 நாய்களுக்கு தடுப்பூசி
போடபட்டது. ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து என்.டி.எம்.சி.
நிர்வாகத்தின் கால்நடை மருத்துவப் பிரிவு இந்த முகாமுக்கு ஏற்பாடு
செய்திருந்தது என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.