தினமணி 31.05.2013
225 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
செய்யாறு நகரில் சுற்றித் திரிந்த 225 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை வியாழக்கிழமை செய்யப்பட்டது.
இந்நகரில் உள்ள 27 வார்டுகளில் 779 தெரு நாய்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 225 தெரு நாய்கள் ஹேண்ட்ஸ் ஃபார் அனிமல் எனும் தொண்டு
நிறுவனத்தின் உதவியுடன் பிடிக்கப்பட்டன.பின்னர் செய்யாறு கால்நடை மருத்துவமனையில், மருத்துவர் கோபி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், நகராட்சி பிரதிநிதி பி.சிவானந்தக்குமார், பொதுப் பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் உள்ளிட்டோர் இப்பணிகளை மேற்பார்வையிட்டனர்.