தினகரன் 11.01.2010
ரூ. 24 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்கா திறப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.24 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்காவை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா ரூ.24 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு 195 மீட்டர் நீளத்துக்கு சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. 250 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 200 சதுர அடியில் கொரியன் கிராஸ் எனப்படும் புதிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சிறுவர், சிறுமியர்களுக்கான பல வகையான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். அமைச்சர் கீதாஜீவன் புதுப்பிக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தார். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, மேயர் கஸ்தூரி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷ்னர் குபேந்திரன், ஏஎஸ்பி அனில்குமார்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.