தினமணி 19.03.2010
நெல்லை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மார்ச் 24 ல் தாக்கல்
திருநெல்வேலி, மார்ச் 18: திருநெல்வேலி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இம் மாதம் 24- ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இம் மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் இம் மாதம் 24- ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், மாநகராட்சியின் வருவாய் மற்றும் மூலதன நிதிக் கணக்கு, குடிநீர் மற்றும் வடிகால் நிதி கணக்கு மற்றும் ஆரம்ப கல்வி நிதி கணக்கு ஆகியவற்றுக்கான 2009 – 2010 ஆண்டுக்கான திருத்திய வரவு – செலவு திட்ட மதிப்பீடு, 2010 – 2011 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு திட்ட மதிப்பீடு ஆகியவை தாக்கல் செய்யப்படுகின்றன. பின்னர், நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பின்னர் நிதிநிலை அறிக்கைக்கு மாமன்றம் ஒப்புதல் வழங்குகிறது.