தினமலர் 14.05.2010
24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை
சென்னை : ”சென்னை நகரில் 24 மணி நேரம் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகள், மண்டலத்திற்கு ஒன்று வீதம் அமைக்கப்படும்,” என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் 8,213 சதுரஅடி பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டட பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று பார்வையிட்டு கூறியதாவது:சென்னை நகரில், சைதாப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் மண்டலத்தில் பெருமாள் பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே, 24 மணி நேரம் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தது.மேலும் மாநகராட்சியின் மற்ற எட்டு மண்டலங் களில், 24 மணி நேரம் செயல்படும் வகையில் மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, எட்டு மண்டலங்களிலும் 16 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டும் பணி நடக் கிறது. கட்டுமான பணிகள் முடிந்ததும், மருத்துவமனைகள் திறந்து வைக்கப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, மண்டல இயக்குநர் யதுக்குல ராவ், கமிஷனர் மணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.