தினமலர் 30.12.2010
பூங்காங்களுக்கு ரூ. 24.65 லட்சத்தில் சுற்றுச்சுவர்
உள்ளகரம் : உள்ளகரம்–புழுதிவாக்கம் நகராட்சியில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது, என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உள்ளகரம்–புழுதிவாக்கம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கிரிஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் குமரமணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 9.5 லட்ச ரூபாய் செலவில் நகராட்சி பொது நிதி மூலம் சாலை அமைப்பது; சாரதிநகர், அன்னை தெரசா நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, பூங்காக்களுக்கு 24.65 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பது; என்.எஸ்.சி., போஸ் சாலையை 16.50 லட்ச ரூபாய் செலவில் அமைப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.