தினகரன் 25.08.2010
சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ24.66 கோடியில் பணிகள் மாநகரில் 109 பணிகளுக்கு மதிப்பீடு
திருப்பூர், ஆக.25: திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் என 109 பணிகளை மேற் கொள்ள ரூ24.66 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், சாலைகளை நேர்த்தியான முறையில் சீரமைத்திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக ரூ1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி சுதந்திர தின விழா உரையில் தெரிவித்திருந்தார். இது தொடர் பாக தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் மொத்தம் 109 பணிகளுக்கு ரூ24.66 லட்சம் மதிப்பில் சாலைகளை அமைக்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடுகளுக்கு மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் பெறும் வகையில், திருப்பூர் மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் நேற்று நடந்தது.
மாநகராட்சி மேயர் செல்வராஜ் தலைமை தாங் கினார். துணை மேயர் செந்தில்குமார், ஆணையாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் இந்த தீர்மானம் மீது நடந்த விவாதம் வருமாறு.
ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) :
மாநகரில் 90 கி.மீ. சாலைகளை மட்டும் மேம்படுத்த அரசு திட்ட மதிப்பீடு கோரியுள்ளது. அரசு ஒதுக்கிய நிதி பற்றாக்குறையாக உள்ளது. அனைத்து சாலைகளையும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக இதேபோன்று திட்டத்தின் 2ம் பாகமாக மீண்டும் ரூ.25 கோடியை ஒதுக்க அரசிடம் மாநகராட்சி முறையிட வேண்டும். அதேபோன்று இதனை 100 சதவீதம் மானிய மாக வழங்க வலியுறுத்த வேண்டும்.
மேயர் செல்வராஜ் :
திருப் பூர் மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு சேதமடைந்த சாலை கள் மற்றும் போடப்படாத மண்சாலைகள் ஆகியவை அர சின் வழிகாட்டுதலின் படி 90 கி.மீ. சாலைகள் ரூ.24.66 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த நிதி முழு மானியமாகும். இதில் விடுபட்ட சாலைகள் நகர்புற சாலைகள் மேம் பாட்டு (டூரிப்) திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். 50 சதவீத மானியம், 50 சதவீத கடன் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அந்த பணிகளுக்கான ஆய்வு பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. விரைவில் இந்த பணிகள் துவங்கும். இந்த நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர், துணை முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறை வேற்ற முன்வர வேண்டும்.
கே.தங்கவேலு (மார்க்சிஸ்ட்) :
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.24.66 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால் எந்தெந்த வார்டில், எந்த அளவுகோலின் அடிப்படையில் என்பது குறிப்பிடப்படவில்லை. இதனை மாநகராட்சி நிர் வாகம் விளக்க வேண் டும்.
(தொடர்ந்து எந்த பணி கள் எந்தெந்த வார்டுகளுக்குட்பட்டது என்பதை மேயர் செல்வராஜ் விளக்கினார்)
பி.ஆர்.நடராஜன் (இந்திய கம்யூ.) :
சிறப்பு சாலைகள் திட்டமான இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சில பணிகள், டூரிப் திட்டத்திலும் உள்ளது. டூரிப் திட்டத்தில் உலக தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும் என சொல்லப்படும் நிலையில், இந்த திட்டத்தில் அந்த பணிகள் மேற்கொண் டால் டூரிப் திட்டத்தில் மீண்டும் அமைக்கப்படுமா. இதனை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். சாலைகள் மேம்படுத்தும் பணிகளை தரத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
பி.ஆர்.நடராஜன் (இந்திய கம்யூ.) :
சிறப்பு சாலைகள் திட்டமான இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சில பணிகள், டூரிப் திட்டத்திலும் உள்ளது. டூரிப் திட்டத்தில் உலக தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும் என சொல்லப்படும் நிலையில், இந்த திட்டத்தில் அந்த பணிகள் மேற்கொண் டால் டூரிப் திட்டத்தில் மீண்டும் அமைக்கப்படுமா. இதனை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். சாலைகள் மேம்படுத்தும் பணிகளை தரத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
சிவபாலன் (ம.தி.மு.க.) :
இத்திட்டத்தின் கீழ் சாலைகள் போடும் முன்னர் மாநகரில் சாக்கடை பிரச்னைகளை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால் சாலை களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுபோன்ற இடங்களில் புதியதாக சாலைகள் அமைப்பது பலனளிக்காது. எனவே சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை மேயர் செந்தில்குமார் :
திருப்பூரின் தேவையை ஒப்பிடும்போது, இந்த நிதி பற்றாக்குறையானது தான். ஏற்கனவே ரூ.40 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. 60 சதவீத பணி முடிவடைந்துள்ளது. இதேபோன்று ஜவஹர்லால் நகர்புற புனரமைப்பு திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி தன்னிறைவு பெறும். நிதி ஒதுக்கிய முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலிலூர் ரகுமான் (முஸ்லீம் லீக்) :
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.24.66 கோடியில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தை முஸ்லீம் லீக் வரவேற்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு முஸ்லீம் லீக் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மேயர் செல்வராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட கவுன்சிலர்கள்.