தினகரன் 29.06.2010
ரூ.25 லட்சம் செலவில் செம்மொழி பூங்கா திறப்புகோவை, ஜூன் 29: கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி குனியமுத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.
குழந்தைகள் விளையாட்டு கருவிகள், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, தண்ணீர் ஊற்று என நவீன முறையில் இப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி தலைவர் துளிசிமணி செல்வராஜ் தலைமையில் நடந்தது.13வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி முத்துசாமி இப்பூங்காவை திறந்துவைத்தார். 12வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி முரளி மின்விளக்குகளை இயக்கிவைத்தார். விழாவில், கவுன்சிலர்கள் பாப்பாமணி, வெற்றிச்செல்வன், ராஜ்குமார், ராஜேந்திரன், குனியமுத்தூர் நகராட்சி தலைவர் கே.பி.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.