தினமணி 30.07.2012
உடன்குடியில் ரூ. 25 லட்சத்தில் தெரு மின்விளக்குகள்: பேரூராட்சித் தலைவி
உடன்குடி,ஜூலை 29: உடன்குடி நகரப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் 205 தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.
உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் புதியதாக தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டுமென பேரூராட்சித் தலைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டஆட்சியர் ஆஷிஷ்குமார் பொதுநிதியில் இருந்து ரூ. 25 லட்சத்தில் 205 தெரு விளக்குகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், உடன்குடி பகுதியில் 18 வார்டு பகுதிகளிலும் உள்ள முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.