தினத்தந்தி 06.08.2013
அம்மா திட்டம் மூலம் 250 பேருக்கு உதவித்தொகை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்
ஈரோடு மாநகராட்சி 3–வது மண்டலத்துக்கு உள்பட்ட சூரம்பட்டிவலசு பகுதியில்
அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு ஈரோடு தாசில்தார் சுசீலா தலைமை
தாங்கினார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர்
மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு
250 பேருக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான உத்தரவை
வழங்கினார்.முன்னதாக சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் ஜெகதீசன்
வரவேற்றார். நிகழ்ச்சியில் ஈரோடு வழங்கல் தாசில்தார் ஆறுமுகம், சமூக
பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமரேசன், துணை தாசில்தார் ஜெயக்குமார்,
வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன், கவுன்சிலர்
எம்.பி.சுப்பிரமணி, அ.தி.மு.க. நகர மகளிர் அணி செயலாளர் பானுசபியா,
பாப்பாத்தி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டு கோரிக்கைகளை கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.