ரூ.2.50 கோடியில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை
திருச்செங்கோடு: நகராட்சிக்கு புதிய நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
திருச்செங்கோடு நகராட்சிக்கு, புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட, 2.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள கட்டிடத்துக்கான கட்டுமான பணிகளை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நகராட்சி சேர்மன் சரஸ்வதி, கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன், நகரமைப்பு அலுவலர் ரவீந்தரன், துணைத் தலைவர் சித்ரா, நகர அ.தி.மு.க., செயலாளர் மனோகரன், லாரிஉரிமையாளர் சங்கத் தலைவர் வேலு, நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி முத்துசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
புதிய கட்டிடத்தின் முதல் தளத்தில், நகராட்சி சேர்மன் அறை, கமிஷனர் அறை, கவுன்சில் அரங்கு, நகராட்சி பொதுப்பிரிவு ஆகியவையும், இரண்டாம் தளத்தில், டவுன் பிளானிங் செக்ஷன், வருவாய் பிரிவு, பொது சுகாதாரத் துறை பிரிவு ஆகியவை செயல்படும்.