தினமணி 18.09.2009
வீடுகளுக்கு குடிநீர் வைப்புத் தொகை ரூ.2,500 ஆக திருத்தம்
கோபி, செப்.17: கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் வீட்டு உபயோக குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகை ரூ.2,500 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலை குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகை ரூ.7,000 எனவும் 1.4.2003 முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலுவை வைப்புத் தொகைகளை உடனே செலுத்த வேண்டும்.
இந்நகராட்சியில் ரூ.469 லட்சம் மதிப்பில் தற்போது நடைபெற்று வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.64.84 லட்சம் குடிநீர் வைப்புத் தொகையிலிருந்து செலுத்தப்பட வேண்டியுள்ளதாலும், மேற்படி நிலுவை வைப்புத் தொகைகளை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி சார்பாக நகராட்சி ஆணையாளர் கா.குப்பமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.