தினமணி 13.10.2010
2,500 தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்சென்னை, அக். 12: சென்னை அம்பத்தூர் பகுதியில் தரமற்ற 2,500 தண்ணீர் பாக்கெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாமலும், காலாவாதியான தேதியைக் கடந்தும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, அம்பத்தூர் நகராட்சியின் நகர் நல அலுவலர் மணிமாறன் தலைமையில் திங்கள்கிழமை (அக்டோபர் 11) அம்பத்தூர், திருநின்றவூர் பேரூராட்சி, ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், குளிர்பான நிலையங்கள் ஆகியவற்றை சோதனை செய்து ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அம்பத்தூர் பகுதியில் உள்ள பாடி, கொரட்டூர், எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், குளிர்பான நிலையங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், காலாவதியான தேதியுடனும், முறையான அனுமதி பெறாமலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2,500 தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.