தினகரன் 18.10.2010 2.51
கோவை, அக்.18: கோவை மாநகராட்சியில் இலவசமாக 2.51 லட்சம் குப்பை கூடை வழங்க டெண்டர் திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 93.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து போடுவதற்காக மாநகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குப்பை கூடை வழங்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 4.58 லட்சம் குப்பை கூடை பெறப்பட்டது. அனைத்து குப்பை கூடைகளும் வீடு, வீடாக இலவசமாக வழங்கப்பட்டது. வெள்ளை, பச்சை நிறத்தில் உள்ள இந்த குப்பை கூடையில் குப்பை குவிக்கலாம். வெள்ளை நிற குப்பை கூடையில் மக்காத பிளாஸ்டிக், பீங்கான், கண்ணாடி பொருட்களை கொட்டலாம், பச்சை நிற குப்பை தொட்டியில் மக்குள் குப்பை கொட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
குப்பை கூடைகள்
, போதுமானதாக இல்லை. வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மீண்டும் ஆய்வு செய்து அனைத்து வீடுகளுக்கும் குப்பை கூடை இலவசமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கேற்ப மாநகராட்சி சார்பில் இ டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேற் பார்வை பொறியாளர் பூபதி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. டெண்டரில், புதுடெல்லியை சேர்ந்த பிரபுதயாள் நிறு வனம், குஜராத்தை சேர்ந்த சின்டெக்ஸ் நிறுவனம் பங்கேற்றது. இதில் சின்டெக்ஸ் நிறுவனத்தின் டெண்டர் தொகை குறைவாக இருந்தது. இந்த டெண்டரை மாநகராட்சி அதிகாரிகள் நிபந்தனையுடன் ஏற்றனர். 1.30 கோடி ரூபாய் செலவில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 715 குப்பை கூடை என இரு ஜோடி (வெள்ளை, பச்சை நிறத்தில்) பெறப்படும். அதாவது 2 லட்சத்து 51 ஆயிரத்து 430 குப்பை கூடை வாங்கப்படும்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்
, ” பச்சை நிற குப்பை கூடை விலை 56 ரூபாய், வெள்ளை நிற குப்பை கூடை விலை 58 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை மூடி இன்றி குப்பை கூடை பெறப்படுகிறது. சுகாதார குழு மற்றும் வரும் மன்ற கூட்டத்தில் இலவச குப்பை கூடை தீர்மானம் கொண்டு வரப்படும். அதற்கு பின்னர் உடனடியாக குப்பை கூடை பெறப்படும்,” என்றனர்.