தினகரன் 20.08.2010 பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ2,600 கோடி கடன் பெங்களூர், ஆக.20: பெங்களூர் மாநகராட்சிக்கு தேசிய வங்கிகளில் ரூ2,600 கோடி கடன் உள்ளதாக மஜத கவுன்சிலர் பத்மநாபரெட்டி தெரிவித்தார். பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாய் திருப்திகரமாக இல்லாததால், செப்டம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே மேயர் நடராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆக.30ம் தேதியன்று 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மேயர் நடராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மாநகராட்சி பட்ஜெட் ஆக.30ம் தேதி தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம் செப்டம்பர் முதல்வாரத்தில் நடக்கும்.‘ என்றார்.
இதனை வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா உறுதி செய்து ள்ளார்.‘இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படலாம் என்ற யூக தேதிகள் அறிவிக்கப்பட்டுவந்தன. தற்போது இறுதி தேதியை மேயர் அறிவித்துள்ளார்.‘ என்கிறார் சதாசிவா.
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் கூறுகையில்,‘மாநகராட்சி ஆளும் பாஜ, பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவருகிறது. இது பொறுப்பற்றத்தனமாகும். பட்ஜெட் தாக்கல் தேதியை அடிக்கடி மாற்றிவருவது, நிர்வாக திறனின்மையை காட்டுகிறது. மேயரை, பெங்களூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரைமறைவில் இருந்து ஆட்டிபடைத்துவருகிறார். எனவே, அறிவிப்பு வெளியான பிறகும், அதனை ரத்து செய்து, புதிய தேதியை அறிவிக்க மேயர் தயங்கமாட்டார்.‘ என்றார்.
மாநகராட்சி மஜத கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கூறுகையில்,‘மாநகராட்சியின் நிதிநிலைமை மோசமாக இருக்கிறது. தேசியவங்கிகள் பலவற்றில் க்ஷீ2600 கோடி அளவுக்கு மாநக ராட்சி கடன்பாக்கிவைத்துள்ளது.
நடப்பாண்டில், கடன் வட்டியை கூட செலுத்தமுடியாமல் மாநகராட்சி திணறிவருகிறது. இதனை சமாளி க்க அக்ரமா&சக்ரமா திட்டத்தை நம்பியுள்ளதோடு, மாநில அரசிடமிருந்து ரூ1500 கோடி கோரியுள்ளது. அதிகாரிகளின் ஆட்சிகாலத்தில் மோசமான நிர்வாகத்தால், மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், மாநகராட்சியின் நிதிநிலைமை சீராகுமா? என்பது சந்தேகமே.‘ என்றா