மாலை மலர் 23.09.2013
சென்னையில் கொசுக்களை ஒழிக்க கூடுதலாக 262 கைத்தெளிப்பான்கள்: மாநகராட்சி ஏற்பாடு
மாலை மலர் 23.09.2013
மேலும்
கூடுதலாக 120 கைத்தெளிப்பான்கள் ரூ.4,27,200 செலவில் கொள்முதல் செய்தும்,
142 சிறிய புகைபரப்பும் இயந்திரங்கள் ரூ.29,82,000 செலவில் கொள்முதல்
செய்தும் வாங்கப்பட்டிருந்தது.
இதை மேயர் சைதை துரைசாமி 15
மண்டலங்களுக்கு வழங்கினார். கூடுதலாக தேவைப்படும் கைத்தெளிப்பான்கள்
மற்றும் சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மண்டலங்களில் தேவைக் கேற்ப
வாங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
500 வீடுகளுக்கு ஒரு
தொழிலாளர் வீதம் 3,200 தொழிலாளார்கள், மழைநீர் வடிகால் கால்வாய், நீர்வழி
பாதைகளில் கொசுப்புழு நாசினி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ள
800 பணியாளர் வீதம் மொத்தம் 4,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதால் 1,453
நிரந்தர தொழிலாளர்களும், 1,762 ஒப்பந்த தொழி லாளர்களும் மொத்தம் 3,215
தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கூடுதலாக தேவைப்படும் 785
தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
நீர்வழிப்பாதை மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு
விலையில்லா கொசு வலைகள் 5 லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்து வழங்கவும்
துரித நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
5 லட்சம் நொச்சி செடிகள் உயரமாக, அடர்த்தியாக அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டெண்டர்கள் கோர ஆணை பிறப்பித்துள்ளனர்.