தினமலர் 05.10.2010
நன்னகரத்தில் ரூ.27 லட்சத்தில்சமுதாய நலக்கூடம் கட்டும் பணி: எம்.எல்.ஏ.ஆய்வு
தென்காசி:மேலகரம் டவுன் பஞ்., நன்னகரத்தில் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் பணியை எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலகரம் டவுன் பஞ்.,நன்னகரத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மேலும் மேலகரம் டவுன் பஞ்.,பொது நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சமுதாய நலக்கூடம் கட்டும் பணி துவங்கியது.இப்பணியை எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, “”நன்னகரத்தில் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் இப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இரண்டு தளங்களை கொண்ட இந்த சமுதாய நலக்கூடத்தின் பணி ஆறு மாதங்களில் முடிவடையும். கட்டடம் தரமானதமாக இருக்கும்” என்றார்.நிகழ்ச்சியில் மேலகரம் டவுன் பஞ்., தலைவர் குமார், நிர்வாக அதிகாரி லெனின், கவுன்சிலர் வேலு, தென்காசி நகராட்சி தலைவர் கோமதிநாயகம், மேலகரம் செயலாளர் சுடலை, சுந்தர், தென்காசி ஒன்றிய செயலாளர் ராமையா, ஆயிரப்பேரி முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.