கோட்டை நகராட்சி பள்ளி ஏப்.,27 நூற்றாண்டு விழா
நாமக்கல்: நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளி, 1913ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி துவங்கி, நூறாண்டு முடிவடைந்தை தொடர்ந்து, நூற்றாண்டு விழா, நாளை (ஏப்., 27), கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நாளை மாலை, 5 மணிக்கு, சுப்புலட்சுமி மஹாலில் நடக்கும் விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகிக்கிறார்.
எம்.எல்.ஏ., பாஸ்கர், நகராட்சி சேர்மன் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தும், விழா மலரை வெளியிட்டும் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, ஏ.இ.இ.ஓ., அன்பழகன், கல்விக்குழு தலைவர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் தயாளன், செயலாளர் ஜோதி குப்புசாமி, பொருளாளர் சின்னுசாமி, ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் ஆகியோர் செய்துள்ளனர்.