மாநகராட்சி ஏற்பாடு இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 27, 28ம் தேதி தேர்வு முகாம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்கள், பெண்களுக்கான இலவச பயிற்சியாக கம்ப்யூட்டர் அனிமேசன் மல்டிமீடியா, எம்.எஸ்.ஆபீஸ், இண்டர்நெட், டேலி மற்றும் டி.டி.பி., பேஷன் டிசைனிங் ஆகிய பயிற்சிகள் நகரின் முக்கிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்படவுள்ளது. பேஷன் டிசைனிங்கிற்கு 5ம் வகுப்பும், மற்ற பயிற்சிகளுக்கு 8ம் வகுப்பும் குறைந்தபட்ச கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான சிறப்பு தேர்வு முகாம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்விச்சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். மேலும் பயிற்சி தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம் என ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.