இலவச கணினி பயிற்சி: மார்ச் 27, 28 நேர்காணல்
பரமக்குடி நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் மார்ச் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என நகராட்சி ஆணையர் கே.அட்ஷயா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
சுவர்ணஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச கணினி பயிற்சி, நர்ஸிங் உதவியாளர், மகப்பேறு உதவியாளர், நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சியுடன் உரிமம் பெறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விரும்புவோரை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்றக் கூட்ட அரங்கில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 35 வயதுடையோர், 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம்.
நேர்காணலுக்கு வருவோர் கல்வி மற்றும் மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்றிதழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அட்டை நகல், 3 பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.