தினமணி 24.05.2010
ஈரோடு:மே 27-ல் மாநகராட்சிக் கூட்டம்
ஈரோடு, மே 23:ஈரோடு மாநகராட்சி மன்றத்தின் இயல்புக் கூட்டம் மே 27-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
÷மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு, மேயர் குமார்முருகேஷ் தலைமை வகிக்கிறார். துணை மேயர் பாபுவெங்கடாசலம், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.