தினமணி 04.10.2013
ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்’
தினமணி 04.10.2013
ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்’
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த
கல்விக்குழு கூட்டத்தில் ரூ.2.81 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில்
அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அனுமதிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அதன் தலைவர் சூரியாச்சாரி தலைமை தாங்கினார். மேயர்
பி.கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தருமலிங்கம், ஆணையர் ஜானகி ரவீந்திரன்
மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தீர்மானங்களையொட்டி விவாதம் நடைபெற்றது. அப்போது
கல்விக்குழுவுக்கு ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய கோருவது மேலும் மாநகராட்சிக்கு
நிதிச் சுமையை ஏற்படுத்தும் என ஆணையர் தெரிவித்தார்.
இந்த நிதிச் சுமையை குறைப்பதற்கு வரி வசூலை அதிகரிப்பது, நிலுவையில்
உள்ள வரியை வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே தீர்வு காண
முடியும் என்றும் அவர் கூறினார்.
கல்விக்குழு பணிகள் எதுவும் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று
அதன் தலைவர் சூரியாச்சாரி குறை கூறினார். ஆணையர் விடுமுறையில் செல்லும்போது
பணிகள் பாதிப்பதாக சூரியாச்சாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் சிறிதுநேரம்
கருத்து மோதல் ஏற்பட்டது.