தினகரன் 04.06.2010
தடையை மீறி பயன்படுத்தப்பட்ட 294 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்நாகர்கோவில், ஜூன் 4: குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை எடுத்து சென்றாலே அவர்களுக்கு ரூ.100 அப ராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ.1000 வரை அப ராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக மது பான பார், சூப்பர் மார்க்கெட் ஆகியவை நாகர்கோவிலில் சீல் வைக்கப்பட்டன.
உத்தரவு அமலுக்கு வந்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் வழக்கம் போல் கேரி பேக்குகள் பயன் பாடு இருந்து வருவதாக குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவுக்கு தகவல்கள் வந்தன. இது தொடர் பாக அண்மை யில் நாகர்கோவில், செட்டிக்குளத்தில் நடந்த ஆலோசனை கூட்டத் தில் கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்தநிலையில் குமரி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பேக்கரி கள், மளிகை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 94 குழுக்களை சேர்ந்த 227 அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 3200 கடைகளில் சோதனை நடத்தப்பட்டத்தில் 157 கடைகளில் இருந்து 294.55 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் குகள், டம்ளர்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக ரூ.14 ஆயிரத்து 550 அபராத மும் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் மட்டும் 350 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் 18 கடை களில் இருந்து 41.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.